இன்று ஆடி அமாவாசை... காகத்திற்கு உணவு வைத்தால் வீட்டில் பணம் பெருகுமா?
ஆடி அமாவாசையான இன்று காகத்திற்கு உணவளித்தால் வீட்டில் பணம் பெருகுமா என்ற கேள்விக்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆடி அமாவாசை
இன்று ஆடி அமாவாசை வழிபாடு பெரும்பாலான இடங்களில் நடைபெறுகின்றது. அதாவது முன்னோர்களின் வழிபாட்டிற்கு உகந்த அமாவாசை இதுவாகும்.
இந்நாளில் விரதமிருந்து இறந்து போன உறவுகளுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுப்பது வழக்கமாகும். இவ்வாறு செய்வதால் முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதிலும் ஆடி அமாவாசை நாளில் தான் நம்முடைய முன்னோர்கள் பூலோகத்திற்கு இறங்கி வந்த நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்று நம்பப்படுகின்றது. மேலும் காகத்தின் வடிவில் நமது வீட்டிற்கு வந்து சாப்பாடு சாப்பிட்டுச் செல்வார்கள் என்றும் கூறப்படுகின்றது.
பித்ருலோகத்தில் இருந்து, நம்மை பாதுகாக்கவும் நமக்கான அனைத்து நன்மைகளையும் தந்து நம்மை ஆசீர்வதிக்கவும் அவர்கள் பூமிக்கு வரும் காலம் என்பதால் மிகவும் விசேஷமான நாளாகக் கருதப்படுகிறது.
காகத்திற்கு உணவு
ஆடி அமாவாசை நாளில் காகத்திற்கு முதல் உணவு வைப்பது வழக்கமாகவும். காக்கைக்கு படைத்த பின்பு வீட்டில் உள்ளவர்கள் விரதத்தினை முடிப்பார்கள்.
காகம் சனி பகவானின் வாகனமாக இருப்பதால், இந்நாளில் நமக்கு ஆசி வழங்குவார் என்றும், பித்ருலோகத்தில் இருக்கும் முன்னோர்களிடம் நாம் செய்யும் திதி, தர்ப்பணத்தை கொண்டு சேர்ப்பது காகம் என்று கூறப்படுகின்றது.
காகத்திற்கு உணவு வழங்குவதால் நமது வாழ்க்கையில் மெல்ல மெல்ல வீட்டில் வளர்ச்சி ஏற்படும்.
இந்த வளர்ச்சி உங்களுக்கு பணத்தை அல்லது செல்வத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். மேலும் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் குறையும்.
ஆடி அமாவாசை தினத்தன்று உங்களின் கஷ்டங்கள் நீங்க ‘ஸ்ரீ ராம ஜெயம்’ என்ற மந்திர வார்த்தையை ஒரு நோட்டில் 108 முறை எழுதிவையுங்கள்.
இதனால் உங்களுடைய துன்பங்கள் நீங்கவும், துன்பத்திலிருந்து வெளிவரும் சக்தியையும் மனவலிமையையும் அனுமன் தருவார் என்றும் நம்பப்பபடுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |