ஆதிக் ரவிச்சந்திரன்- ஐஸ்வர்யா திருமணத்தில் மறைக்கப்பட்ட பெரிய உண்மை.. பயில்வான் பளீச்
ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய என்ன காரணம் என பயில்வான் ஓபனாக பேசியுள்ளார்.
திருமணம்
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய முன்னர் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
பின்னர் இவர்களின் நட்பு காதலாக மாறி இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணத்தில் உறவினர்கள், முக்கியமான சில சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களின் வாழ்த்துக்களை கூறியிருந்தனர்.
பயில்வான் ஓபன் டாக்
இந்த நிலையில் இவர்களின் திருமணம் குறித்து விமர்சகர் பயில்வான் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது, “ ஐஸ்வர்யா முதலில் பிரபுவின் சகோதரி தேன்மொழியின் மகன் குணால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
குடும்ப பிரச்சினை காரணமாக இவர்களுக்குள் விவாகரத்து ஆனது. ஐஸ்வர்யா “ ரெட் அசெட் ” என்ற பெரிய கேக் பேக்கிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அப்போது தான் இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர்.
பின்னர் நட்பாக பழகி தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். புது தம்பதிகளாக திகழும் ஆதி - ஐஸ்வர்யாவிற்கு ஒன்பது வயது வித்தியாசம். இவர்களில் ஆதி இளையவர்..” எனக் கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அத்துடன் “ எதற்காக இவ்வளவு பெரிய பெண்ணை ஆதி திருமணம் செய்து கொண்டார்?” என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |