இது தெரியாமல் இனி தொடாதீங்க.. அறிவியல் ரகசியம்
பொதுவாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல சின்னங்கள் (symbols) உள்ளன.
அவை வெறும் குறியீடுகள் மாத்திரம் அல்ல. அவற்றிற்கு பின்னால் சுவாரஸ்யமான வரலாற்று கதைகளும் அர்த்தங்களும் உள்ளன.
தினமும் நாம் பார்க்கும் மொபைல் போன், கணினி, டிவி உள்ளிட்டவைகளில் இந்த தளங்கள் மற்றும் செயலிகளை பார்க்கலாம்.
அந்த வகையில், தினமும் பயன்படுத்தும் சாதனங்களில் உள்ள குறியீடுகளின் அர்த்தங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. பவர் பட்டன் (Power button):
பவர் பட்டன் பார்க்கும் பொழுது ஒரு வட்டம், அதற்குள் ஒரு நேர் கோடு இருப்பது போன்று இருக்கும். இது, கணினி மொழியில் 'பைனரி' முறையைக் குறிக்கிறது. '1' என்பது 'ஆன்' (on), '0' என்பது 'ஆஃப்' (off). இந்த இரண்டும் இணைந்து இந்த சின்னம் உருவாகியது. இந்த சின்னம் உலக போரின் பொழுது இன்ஜினியர்கள் முதல் முறையாக பயன்படுத்துவார்கள். சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 20 முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்டது என்ற கதை உள்ளது.
2. Wi-Fi சின்னம்
Wi-Fi சின்னத்தில் புள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள அலைகள் இருப்பது வடிவமைக்கப்பட்டிருக்கும். கண்ணுக்குத் தெரியாத ரேடியோ அலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 1999ஆம் ஆண்டு, வயர்லெஸ் நெட்வொர்க் பயன்பாட்டைத் தரப்படுத்துவதற்காக Wi-Fi Alliance நிறுவனம் இந்த சின்னம் உருவாக்கியது. எந்த நாட்டில் வாழும் மக்களாலும் இதனை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். இதனால் உலக அளவில் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
3. ஹார்ட் சின்னம் (Heart)
மனித இதயம் குறிக்கும் இந்த சின்னமாக அன்பின் வெளிபாடாக பார்க்கப்படுகிறது. இதன் தோற்றம் குறித்து பல கோட்பாடுகள் இதில் உள்ளன. கருத்தடைக்கு பயன்படுத்தப்பட்ட 'சில்ஃபியம்' என்ற தாவரத்தின் விதையின் வடிவமாக பார்க்கப்படுகிறது. அதே போன்று மத்திய காலத்தில் விசுவாசத்தை குறிக்கும் ஐவி இலையுடன் (ivy leaf) இணைந்துள்ளது. உலகளவில் அனுப்பப்படும் எமோஜிக்களில் 10% க்கும் மேல் இந்தச் சின்னமாக கணக்கிடப்பட்டுள்ளது.
4. ப்ளூடூத் சின்னம் (Bluetooth):
ப்ளூடூத் சின்னம் பார்ப்பதற்கு இரண்டு நோர்ஸ் (Norse) இருப்பது போன்றும், எழுத்துக்களின் கலவையாகவும் இருக்கும். 10 ஆம் நூற்றாண்டில் டென்மார்க்கை ஆண்ட அரசர் ஹரால்ட் ப்ளூடூத்தை (Harald Bluetooth) குறிக்கிறது. இவர் டென்மார்க் பழங்குடியினரையும் குறிக்கிறது. ப்ளூடூத் தொழில்நுட்பம் சாதனங்களில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 1994 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தொழில்நுட்பம் மனிதர்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒன்று.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |