அவங்க ரெண்டு பேருக்கும் கோச்சிங்கே இல்லை.. ஆர்சிபியின் இரண்டு ஜாம்பவான்களின் சீக்ரெட்டை உடைத்த கோச்
ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி மற்று ஏபிடி வில்லியர்ஸின் திறமையை பற்றி கோச் சைமன் காட்டிச் தெரிவித்த கருத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
2021 ஐபிஎல் சீசனில் சிறப்பான துவக்கத்தை ஆர்சிபி அணி கொடுத்து வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 5 போட்டியில் வெற்றியும், சிஎஸ்கேவிற்கு எதிரான கடந்த போட்டியில் மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளது.
மேலும், இந்த அணிக்கு பக்க பலமாக கேப்டன் விராட் கோலியும், ஏபிடி வில்லியர்ஸும் உறுதுணையாக உள்ளனர்.

இந்நிலையில், இருர்கள் இருவரும் சிறப்பான உலக தரத்திலான வீரர்கள் என்பதால் அவர்களுக்கு ஏற்ப தன்னுடைய கோச்சிங்கை மாற்றிக் கொண்டுள்ளதாகவும், ஆனால் அவர்கள் இருவருக்கும் கோச்சிங்கே தேவையில்லை என்றும், தங்களுக்கு தாங்களே அவர்கள் சிறந்த கோச்களாக இருப்பதாகவும் அணியின் தலைமை கோச் சைமன் காட்டிச் தெரிவித்துள்ளார்.

மேலும், உலக தரத்திலான வீரராக இருந்தாலும் விராட் கோலி இன்னமும் கற்றுக் கொள்வதில் அதிகமாக ஆர்வம் காட்டி வருவதாகவும் காட்டிச் தெரிவித்துள்ளார்.
அவருடைய போட்டியை சிறப்பாக்கும் எந்த புதிய விஷயம் குறித்தும் அவர் கேட்டு அறிந்துக் கொள்வார் என்றும் அவர் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.