மைதானமே ரணகளத்துல இருக்கும் போது, அந்த வீரர் மட்டும் என்ன செய்றார் பாருங்க! வைரலாகும் ஒற்றை புகைப்படம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியின் போது பெங்களூர் வீரரான கைல் ஜேமிசன் செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் (IPL) தொடரின் 31-வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (RCB), இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் (KKR) மோதின.
டாஸ் ஒன்று துடுப்பாடத் தொடங்கிய பெங்களூரு அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, முடிவில் 19 ஓவர்கள் முடிவில் 92 ரன்களுக்கு பெங்களூரு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
Your team is struggling to score. But, you are scoring in dugout. Well played Jamieson.???.??????.@IamLokesh26 @VijayVk_ @Fahad_Vj_ @suhana_zuha @Abinandhiniiii @DavidVj007 @Itz_Outlander @sahidafridi197 pic.twitter.com/w5Eo0pJcW5
— sai asok kumar (@saiasokkumar2) September 20, 2021
இதனை அடுத்து துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் பெங்களூரு அணியில் விளையாடி வரும் நியூஸிலாந்து வீரர் கைல் ஜேமிசனின் (Kyle Jamieson) போட்டோ இணையத்தில் பரவி வருகிறது.
அதாவது மைதானத்தில் இக்கட்டான சூழலின் போது, வீரர்கள் பதற்றத்துடன் இருந்த நிலையில், கைல் ஜேமிசன் மட்டும் பெங்களூரு அணியின் மசாஜ் தெரபிஸ்ட் நவனிதா கௌதமிடம் (Navnita Gautam) சிரித்து பேசிக்கொண்டு இருந்தார்.
இந்த புகைப்படம் வைரலாக ரசிகர்கள் பலரும் தங்களது கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Jamieson interested in different match.. ??#RCBvKKR #IPL2021 pic.twitter.com/0tg7MwkMJl
— Ramesh...ᴿᵃᵈʰᵉˢʰʸᵃᵐ? (@Rebelstaaar) September 20, 2021