சென்னைக்கு கொண்டுவரப்பட்ட ஆர்.பி.சௌத்ரி உடல் : திரைத்துறையினர் அஞ்சலி!
பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனருமான ஆர்.பி. சௌத்ரி நேற்று (5) ராஜஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார்.
நடிகர் ஜீவாவின் தந்தையான இவர் தனது சொந்த ஊரான உதய்பூருக்கு ஒரு திருமண நிகழவுக்கு சென்றநிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

அவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரது உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலிற்கு நாளை காலை இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |