மின்னல் வேகத்தில் எடையை குறைக்கும் சிவப்பு அவல் முட்டை உப்புமா! எப்படி செய்வது?
பொதுவாகவே தற்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று தான் உடல் எடை அதிகரிப்பு.
தற்காலத்தில் பலரும் ஒரே இடத்தில் அமர்ந்தபடி பல மணிநேரங்கள் வேலை பார்ப்பது,அதிகரித்த துரித உணவுகளின் நுகர்வு, உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாமை, காய்கறிகளை தவிப்பது போன்ற பல காரணங்களால் உடல் பருமன் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கின்றது.
இந்த பிரச்சினைக்கு குறிப்பாக தொப்பை பிரச்சினைக்கு எளிமையாக தீர்வு கொடுக்க கூடிய காலை உணவான சிவப்பு அவல் முட்டை உப்புமாவை எவ்வாறு விரைவாகவும் சுவையாகவும் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அவல் - 1 கப்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/4 தே.கரண்டி
சீரகம் - 1/4 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
வரமிளகாய் - 2
வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/4 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 1/4 தே.கரண்டி
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைகேற்ப
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
முட்டை - 2
சில்லி ப்ளேக்ஸ் - சிறிது
மிளகுத் தூள் - 1/4 தே.கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சிவப்பு அவலை எடுத்து, அதில் நீரை ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
5 நிமிடம் கழித்து, அவலை நீரில் இருந்து பிழிந்து தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். அடுத்து அதில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். பின் அதில் குடைமிளகாயை சேர்த்து, சுவைக்கேறப் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, மூடி வைத்து குடைமிளகாயை வேக வைக்க வேண்டும்.
பின்பு மூடியைத் திறந்து, அதில் சிவப்பு அவலை சேர்த்து நன்கு ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.
பின் நடுவில் குழி போன்று செய்து, அதில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிது உப்பு மற்றும் சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கிளறி, அவலுடன் ஒன்று சேரும் வரை நன்கு கிளறி, மிளகுத் தூள் தூவி பிரட்டி இறக்கினால், சுவையான சிவப்பு அவல் முட்டை உப்புமா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |