வேட்டி சட்டையில் மனைவியுடன் பிராத்தனைக்கு சென்ற ரவீந்தர்! என்ன பிரார்த்தனை தெரியுமா?
மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் மங்களகரமாக கோயிலில் நின்று ரசிகர்களுக்காக பிராத்தனை செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னித்திரை பயணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான டாப் சீரியல்களில் ஒன்றான 'அன்பே வா' சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை மகாலட்சுமி.
இவரின் யதார்த்தமான நடிப்பாலும் வில்லங்கமான பார்வையாலும் தமிழ் நாட்டில் பலக் கோடி ரசிகர்கள் தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
இவர் சின்னத்திரையில் இருக்கும் போது பெரியளவில் பேசப்படாமல் திருமணத்திற்கு பின்னர் நயன்தாராவை விட அதிகமாக பேசப்பட்டார். இதற்கு என்ன காரணம் என்று தேடி பார்த்தால், ரவீந்திரனின் உடல் தோற்றம் தான். இதனால் பல இன்னல்களுக்கும் விமர்சகங்களுக்கும் இருவரும் முகங்கொடுக்க வேண்டிய நிலை இருந்தது.
இந்த சர்ச்சை பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரவீந்தரும், மகாலட்சுமியும் பல பேட்டிகள் கொடுத்து வந்தார்கள். தொடர்ந்து இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விடயத்தையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் பகிர்ந்தும் வருகிறார்கள்.
ரசிகர்களுக்காக கோயில் சென்ற பிரபலங்கள்
இந்த நிலையில், ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். எங்கு சென்றாலும் ஒரு புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கமாகக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்தவகையில் முருகன் கோயிலுக்கு சென்று தம்பதிகளாக வேண்டி கொண்டு, தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்களுக்கு தங்களின் சார்பாக வேண்டிக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்கள்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களுக்காக கோயில் சென்றதற்கு நன்றி எனவும், மகாலட்சுமி கர்ப்பமாக இருப்பதாக ஒரு வதந்தி கிளம்பி இருக்கிறது. இதற்கு என்ன பதில் கூற விரும்புகிறீர்கள் எனவும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.