ட்ரெண்டிங் ஜோடியின் மற்றுமொரு நற்செய்தி! ஹோட்டலில் கொண்டாட்டத்தின் போது வெளியான புகைப்படம்
ட்ரெண்டிங் ஜோடிகளாக வலம் வரும் ரவீந்தர் - மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்கள்.
காதல் திருமணம்
சின்னத்திரையில் பிரபல நடிகையாகவும் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரரை காதலித்து மறுமணம் செய்துக் கொண்டார்.
மேலும் மகாலட்சுமி முதல் திருமணம் விவாகரத்தான நிலையில் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.
இவர்களின் திருமணம் வெள்ளித்திரை பிரபலங்களை விட மிகவும் அதிகமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
மேலும் இவர்களின் உருவங்களை கலாய்க்கும் விதமாக பல சர்ச்சை விமர்சனங்களும் வெளிவந்தது.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இதற்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளை புகைப்படங்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
வாழ்த்துக்கள் குவியும் இன்ஸ்டா பதிவு
இந்நிலையில் தற்போது இருவருக்கும் திருமணமாகி 100 நாட்களான நிலையில் இதனை ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டாடியுள்ளார்கள்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு மகாலட்சுமிக்கு வாழ்த்துக்கள் மற்றும் காதல் வரிகள் சிலவற்றையும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.