ரவீந்தரின் திருமண சர்ச்சை! வனிதாவின் பதிவிற்கு ரவீந்தர் கொடுத்த பதிலடி
தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மகாலட்சுமி திருமணத்திற்கு வனிதா வெளியிட்ட டுவிட்டுக்கு ரவீந்தர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
ரவீந்தர் மகாலட்சுமி
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் விஜே மகாலட்சுமி ஆகிய இருவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையல், பெரும் வைரலாகியும் வருகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜே மகாலட்சுமியை தயாரிப்பாளர் ரவீந்தர் காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்து ஹனிமூன் சென்று நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் ரவீந்தர் பேசுகையில், கல்யாணம் ஆனதுக்கு முன்னாடி மகாவிடம் சேலஞ் பண்ணி சொன்னேன். வனிதா நிச்சயம் எனக்கு வாழ்த்து தெரிவிப்பார் என்று கூறியுள்ளார்.
இதைப்போலவே வனிதாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ”மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக பிஸியாக இருக்கிறேன். Karma யாரையும் சும்மா விடாது.
அதற்கு எப்படி திருப்பி கொடுக்க வேண்டும் என்று தெரியும். அதை நான் முழுமையாக நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
Too happily busy to be bothered about anyone else’s LIFE …. Karma is a B***H … she knows to give it back .. I trust her completely ??
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) September 5, 2022
ரவீந்தரின் தக்க பதிலடி
வனிதாவின் இப்பதிவிற்கு ரவீந்தர் தக்க பதிலடி தற்போது கொடுத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பின்னர் ரசிகர்களுடன் லைவில் கலந்துரையாடிய ரவீந்தர், ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
முன்னதாக திருமணத்திற்கு வாழ்த்திய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார் பின்னர் வனிதாவின் விமர்சனந்திக்கு பதிலளித்த இவர், "வனிதாவின் ட்விட்டை நான் படித்தேன்.
குர்மா இஸ் மை.. என எதோ எழுதி இருந்தார். அது என் வாயில் கூட நுழையவில்லை . அதை பற்றி பேச எதுவும் இல்லை, என் வாழ்க்கை யாருடைய கண்ணீரிலும் தொடங்கவில்லை" என நச் என பதிலடி கொடுத்துள்ளார்.
