8வது அதிசயம்! மனைவியுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ரவீந்தர்
தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமி குறித்து பதிவிட்ட பதிவொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரவீந்தர் - மகாலட்சுமி
சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், சீரியல் நடிகை மகாலட்சுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
வி.ஜே மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகன் உள்ளார். இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட விஷயம் சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வந்தது.
ரவீந்தர் திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக கொண்டிந்தார்.
பதிவு
இந்நிலையில் தனது திருமணத்தின் 100வது நாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
"100 நாட்கள் முடிந்தது.. அம்மு..37 வருடங்களுக்குப் பிறகு.. ஒவ்வொரு நொடியிலும் 100 நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன்.. அதே அதிக அன்பு, அக்கறை, வேடிக்கை, சண்டை என என்னை நகர்த்திக்கொண்டே இரு. வாழ்றேன் அம்மு சந்தோசமா உன்னால்" என ரவீந்தர் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும் என் வாழ்வின் 8-வது அதிசயம் என் மனைவி" என பதிவிட்டு மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார்.