மன அழுத்தத்தில் தவிக்கும் நடிகை மகாலட்சுமி... தொலைபேசி எண்ணை மாற்றி ஏமாற்றியது அம்பலம்
மோசடி வழக்கில் ரவீந்தர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மனைவி மகாலட்சுமி மன அழுத்தத்தில் காணப்படுகின்றார்.
ரவீந்தர் மகாலட்சுமி
தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்பு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மகாலட்சுமி. இவரது வில்லித்தனமான நடிப்பு அனைவரையும் கோபம் கொள்ள வைக்கும்.
அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்து வரும் இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்துள்ளார்.
பின்பு சக நடிகருடன் தொடர்பு என பல சர்ச்சைகளில் சிக்கிய இவர் கடந்த ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் உருவக்கேலிக்கு ஆளாகி பல கருத்துக்களை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியாக இந்த ஜோடி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
பண மோசடியில் ரவீந்தர்
ஏற்கனவே ரவீந்தர் அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்துள்ளதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொழில் சம்பந்தமாக 200 கோடிக்கு மேல் பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளது அம்பலமாகியுள்ளது. சினிமா துறையை விட்டு வெளியில் பிரபலமானவர்களிடம் இவ்வாறு மோசடி செய்துள்ளார்.
அதாவது குறித்த கோடிக்கணக்கான பணத்தை நிலக்கழிவு மூலம் இரண்டு மடங்கு சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி பலரிடமும் ஏமாற்றியுள்ளது அம்பலமாகியுள்ளது.
கணவரின் கைதால் மன அழுத்தத்தில் காணப்படும் மகாலட்சுமி எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் இருந்து வருகின்றார். ரவீந்தர் மொபைல் போன் நம்பரை மாற்றி இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
நடிகை மகாலட்சுமி பணத்திற்காகவே திருமணம் செய்துள்ளதாகவும், இந்த பிரச்சினை ஆரம்பத்தில் தெரிந்திருந்தால் திருமணம் செய்திருக்க மாட்டார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |