எனது உயிர்நாடியாக இருந்தவர் கெனிஷா தான்... வைரலாகும் ரவி மோகனின் புதிய அறிக்கை!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும், ரவி மோகன். கடந்த ஆண்டு திருமண விவாகரத்து சரச்சையில் சிக்கிய இவர், இப்போது தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.
ரவி மோகன்
தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ரவி மோகன். கடந்த ஆண்டு இறுதியில் திடீரென பெயரை மாற்றினார், இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் தனித்துவமான பாணியில் இருப்பதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இவரது நடிப்பில் கடைசியாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகின்றது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு திரைப்படத்திலும் ரவி மோகன் நடித்து வருகிறார்.
ரவியின் விவாகரத்து அறிவிப்பு வெளியான சமயத்தில், இன்னொரு விஷயமும் வெளியானது. அது ஒரு புகைப்படம் ஆகும். இதில் அவர் கோவாவை சேர்ந்த கெனிஷா என்ற பாடகியுடன் இருந்தார்.
அண்மையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தா திருமண நிகழ்ச்சியில் ரவி மோகன் தனது தோழி மற்றும் காதலி என்ற சர்சையில் சிக்கிய கெனிஷா பிரான்சிஸூடன் ஜோடியாக கவந்துக்கொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி புதிய புயலை கிளப்பியது. அதனை தொடர்ந்து அவரது மனைவி ஆர்த்தி ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது ரவி மோகன், என் மௌனம் பலவீனம் அல்ல. எனது நேர்மையை கேள்விக்குள்ளாக்கினால் பேச வேண்டும். சட்டத்தை முழுமையாக நம்பியுள்ளேன்.
அது உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும். தந்தையாக என்னை கேள்விக்குள்ளாக்கும் குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். ஒரு தந்தையாக எனது குழந்தைகளை பார்க்க சரியாக அனுமதிக்கப்படவில்லை.
ஒரு மனிதனாகவும் தந்தையாகவும் நான் விலகிச் செல்ல எடுத்த வலிகளை அவர்கள் அறிந்து கொள்வார்கள். முன்னாள் மனைவியை பொருளாதார ரீதியாக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டுவது நகைச்சுவை, அதிர்ச்சியாக இருக்கிறது.
இதுவே எனது கடைசி அறிக்கை. அவர்கள் இன்னும் அதிக அழிவுக்கு ஆளாக நேரும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். கண்ணீரும் ரத்தமுமாக இருந்த சூழலில் உயிர்நாடியாக எனக்கு இருந்தவர் கெனிஷா. இவ்வாறு ரவி மோகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கை தற்போது இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |