ரவி மோகனின் ஜீவனாம்சம் மனு - கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
ஆர்த்தி ரவியின் ஜீவனாம்ச மனுவின் காலக்கெடுவை நீட்டிக்ககோரிய ரவியின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியப்போவதாக அறிவித்திருந்தார். இதன் பின்னர் மனைவி ஆர்த்தி ரவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

ரவி மோகன் ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இறுதி தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் அவதூறு அல்லது தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
ரவிமோகனின் தோழி ரவிமோகனுடனான நட்பை முறித்துக்கொண்டு சென்னையை விட்டு போக போவதாக கூறி இருந்தார். இதன் பின்னர் நடிகர் ரவி மோகன் கடந்த மே 16-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து வழக்கு தொடர்பாக பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என இரு தரப்புக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கோர்ட் உத்தரவை மீறி ரவி மோகன் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதாக ஆர்த்தி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்க்கு மனப்பூர்வமாக ரவி மோகன் மன்னிப்பு கேட்டிருந்தார்.
இதன் பின்னர் ரவி மோகன் 2025 ஆண்டு முதல் ஜீவனாம்ச பணம் கொடுக்கவில்லை என்றும் இடைக்கால ஜீவனாம்சம் வேண்டும் என ஆர்த்தி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆர்த்தி ரவி தாக்கல் செய்திருந்த இடைக்கால ஜீவனாம்ச மனுவை இரண்டு வாரத்துக்குள் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த இரண்டு வாரத்தை இன்னும் நீடிக்க வேண்டும் என்று ரவி மோகன் புதிதாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.
ஆர்த்தி ரவி சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி காலக்கெடுவை நீடிக்க கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து இது தொடர்பில் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |