ரவி மோகனுடன் மாலையும் கழுத்துமாக நின்ற கெனிஷா- படுவைரல் புகைப்படம்
நடிகர் ரவி மோகன் தன்னுடைய தோழி கெனிஷாவுடன் மாலையும் கழுத்துமாக கோயிலில் நின்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் ரவிமோகன்
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ரவிமோகன்.
இவர் நடிப்பில் கடைசியாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியானது.
இதற்கிடையில், மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து சர்ச்சைகள் வெடித்து கொண்டிருக்கின்றன. இதனால் சமீப நாட்களில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் கொடுத்திருக்கிறார். அதில், அவருடைய பெயரை ரவி மோகன் என மாற்றியுள்ளார் மற்றும் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார் ஆகியன அடங்கும்.
விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. என்றாலும் அதனை பற்றிய செய்திகள் எதையும் பகிரவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாலையும் கழுத்துமாக வெளியான புகைப்படம்
இந்த நிலையில், தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படும் ரவி மோகன் தன்னுடைய தோழியான கெனிஷாவுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில், கெனிஷா மற்றும் ரவி மோகன் இருவரும் ஜோடியாக குன்றக்குடி முருகன் கோவிலுக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு கழுத்தில் மாலை உடன் பக்கத்து பக்கத்தில் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
மேலும், ரவி மோகன் ரசிகர்கள் இப்படியான புகைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |