நடிகர் ரவி மோகன் வீட்டுக்கு ஜப்தி நோட்டீஸ்.. இவ்வளவு வன்மம் ஏன் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ரவி மோகன் வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டியதாக புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ரவி மோகன்
தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானாவர் தான் நடிகர் ரவி மோகன்.
இந்த திரைப்பட வெற்றிக்கு பின்னர், ரவி தன்னுடைய பெயரை ஜெயம் ரவி என மாற்றிக் கொண்டார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் ரவி மோகன் என்று பெயர் மாற்றம் செய்திருந்தார்.
கடந்த வருடம் அவருடைய குடும்ப பிரச்சினைகள் ஊடகங்களுக்கு வர ஆரம்பித்தது.
அதாவது காதலித்து திருமணம் செய்த ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாகவும், குடும்பத்திற்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் நடப்பதாகவும் அறிக்கையொன்றை பகிர்ந்தார். அன்று முதல் இன்று வரை சமூக வலைத்தளங்களில் ரவிமோகன் பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
ஐகோர்ட்டில் வழக்கு பதிவு
இந்த நிலையில், டச் கோல்ட் யுனிவர்சல் தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் நடிகர் ரவி மோகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
அதாவது கடந்த ஆண்டு செப்டம்பரில் 2 படங்களில் நடிக்க ரவி மோகன் ஒப்பந்தம் செய்துள்ளார். முதல் படத்திற்காக முன் பணமாக 6 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். ஆனால் இறுதியில் படத்தில் நடிக்காமல் வேறு நிறுவன படங்களில் நடித்து வந்திருக்கிறார்.
இதனால் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகருக்கு சொந்தமான ஈசிஆர் பங்களாவை ஜப்தி செய்து தங்களது பணத்தை திரும்ப தரும்படி தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜப்தி நோட்டீஸ்
இது தொடர்பான விசாரணையில், நடிகர் ரவிமோகன் பங்களாவை தனியார் வங்கியில் கடன் பெற்று வாங்கியுள்ளார். அதற்கான தவணை தொகையையும் ரவி மோகன் சரியாக கட்டாமல் வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ரவிமோகன் தரப்பில் இருந்து பதில் எதுவும் வராத நிலையில், தனியார் வங்கி நிர்வாகம் சார்பில் 3 அதிகாரிகள் ரவி மோகனின் வீட்டில் ஜப்தி நோட்டீஸை ஒட்டிச் சென்றுள்ளனர். நோட்டீஸ் ஒட்டப்பட்ட வீட்டில் நடிகர் ரவிமோகன் இல்லை என்பதால் அவருடைய அலுவலகத்திற்கு நோட்டீஸ் ஒட்டப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறிச் சென்றுள்ளனர்.
இப்படி பல நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ரவி மோகன், உடனடியாக வங்கிக்கான மாதாந்திர இஎம்ஐ தொகையை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்த பங்களாவை தனியார் வங்கி வசம் சென்று விடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
