பிக்பாஸில் கலந்து கொள்ளும் விஜய் பட நடிகை…அப்போ இந்த சீசனோட காதல் பறவை இவங்கதானா?
பிக்பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தொடர்பில் புதிய அப்பேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7
பிரபல தொலைகாட்சியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியில் வருடாந்தம் பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.
இதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் நட்சத்திரங்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்து விடுவார்கள்.
அந்த வகையில் பிக்பாஸ் வரும் போட்டியாளர்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் வெளி உலகத்துடனும் தங்களது குடும்பத்துடனும் தொடர்பில்லாமல் இருக்க வேண்டும்.
பிக்பாஸில் கலந்து கொள்ளும் மற்றுமொரு போட்டியாளர்
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7 மிக பிரமாண்டமாக இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக இருப்பதால் தினம் ஒரு அப்பேட் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தொடர்பில் இன்னும் முழு விவரங்கள் வெளியாகாமல் உள்ளது.
பிக்பாஸில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இன்றைய தினம் வெளியான தகவலின் படி விஜய் பட நடிகை ரவீனா கலந்து கொள்ளவுள்ளாராம்.
இவரின் பெயரை கேட்ட விமர்சகர்கள் இந்த சீசனில் ஒரு புதிய காதலை பார்க்கலாம் என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
ரவீனா சமீபக்காலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதற்கு இது தான் காரணமா? என இன்னும் சிலர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |