வெறும் 10 நிமிடத்தில் அசத்தல் சுவையில் காலை உணவு செய்யணுமா? 1/2 கப் ரவை இருந்தா போதும்!
பொதுவாகவே காலை நேரத்தில் அலுவலக வேலைக்கு செல்லும் கணவன், பாடசாலைக்கு செல்லும் குழந்தைகள் என வீடே பாபரப்பாக இருக்கும்.
அதிலும் மனைவியும் வேலைக்கு செல்பவராக இருந்தால் சொல்லவும் வேண்டுமா? வீடே போர்களமாக தான் இருக்கும்.
இதற்கு மத்தியிலும் குழந்தைகளுக்கும் தங்களுக்கும் ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த காலை உணவை வெறும் பத்து நிமிடத்தில் செய்ய வேண்டுமா? அப்போ அந்த ரவா கிச்சடியை ட்ரை பண்ணுங்க.
தேவையான பொருட்கள்
ரவை - 1/2 கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
சீரகம் - 1/2தே.கரண்டி
முந்திரி - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
சுடுநீர் - 1 கப்
நெய் - 3 தே.கரண்டி
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி சூடானதும், ரவையை சேர்த்துலேசாக நிறம் மாறும் வரையில் வறுத்து இறக்கி ஆறவிட வேண்டும்.
அதனையடுத்த அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், முந்திரி ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் , இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை ஆகியவற்றை சேர்த்து வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட் மற்றும் தக்காளி ஆகியவற்றை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, காய்கறிகள் நன்றாக வேகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் ஆறவைத்த ரவையை சேர்த்து நன்றாக கிளறி விட்டு சிறிதளவு சுடுநீரை சேர்த்து மூடி வைத்து சில நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிட்டு, இறுதியாக நெய் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ரவா கிச்சடி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |