குழந்தைகளும் விரும்பி உண்ணும் ரவா தோசை... வெறும் 10 நிமிடம் போதும்
பொதுவாகவே குழந்தைகளாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி காலை உணவை தவிர்க்கவே கூடாது.
காலை உணவை தவிர்ப்பது தான் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அந்தவைகயில், மிகவும் எளிமையாகவும் ஆரோக்கியமாவும் செய்யக்கூடிய ஒரு அருமையான காலை உணவாக மொறு மொறுப்பான சுவையில் குழந்தைகளையும் நொடியில் உணவை காளி செய்ய வைக்கும் ரவா தோசை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவை - 100 கிராம்
அரிசி மாவு- 60 கிராம்
வெற்று மாவு (மைதா அல்லது கோதுமை) -60 கிராம்
வெங்காயம் - 1 நறுக்கியது
இஞ்சி - 1 தே.கரண்டி ( பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி- சிறிதளவு (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
மிளகு தூள் - 1/4 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
உப்பு- தேவையான அளவு
தயிர்- 1 தே.கரண்டி
தண்ணீர் - 650 மில்லி லீட்டர்
நெய் - சிறிதளவு

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களில் நெய்யை தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் தேவையான அளவில் தேசை மாவை குழிக்கரண்டியால் எடுத்து ஊற்றி ஒரு பக்கம் வெந்ததும் சிறிது நெய் சேர்த்து மடித்து தட்டிற்கு மாற்றினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த ரவா தோசை தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |