புதிய தொழில் துவங்க ஆசையா? அப்போ ரத்தன் டாடாவின் சக்சஸ் Quotes தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக ஒரு வயது வந்த பின்னர், எதாவது துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை நம்மிள் பலருக்கு இருக்கும்.
அப்படியானவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய நபர் தான் ரத்தன் டாடா.
பல்லாயிரக்கணக்கான பணத்தை பொதுமக்களுக்காக கொடுத்த மகானாக பார்க்கப்படுகிறார். இவரின் பெரும்பாலான சொத்துக்கள் அவரிடம் இல்லை என கூறப்படுகிறது.
இவருடைய வரலாற்றை தேடிப் பார்த்த பொழுது நாம் பார்த்து மெய்மறந்து போகும் விடயங்களே அதிகமாக உள்ளன.
ரத்தன் டாடா இந்தியாவின் பொருளாதாரத்தில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தார்.
தொழில் சார்ந்து பல சாதனைகளை செய்திருந்தாலும் அவரின் இழகிய மனமும் எளிமையும் தான் இன்று நம்மளை சிந்திக்க வைத்துள்ளது. அந்தவகையில் ரத்தன் டாடாவின் சக்சஸ் Quotes-கள் சிலவற்றை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ரத்தன் டாடாவின் Quotes

"சிறந்த வேலை செய்ய ஒரே வழி நீங்கள் செய்யும் வேலையை நேசிப்பதுதான்".
"ஈசிஜி வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்தான் நமது உயிர்த்துடிப்பைக் காட்டுபவை. அதேபோல வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள்தான் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கும்".
"வேகமாக நடக்க விரும்பினால் தனியாக நட. ஆனால் நீண்ட தூரம் நடக்க விரும்பினால், பிறருடன் ஒன்றாக நட".
"நல்ல சேவையை வழங்கினால், நல்ல வியாபாரம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்".
"முக்கியமான விஷயம் என்னவென்றால், எவ்வளவு சிறிய முன்னேற்றமாக இருந்தாலும், முன்னேற்றம் முக்கியமானது".
"எதிர்காலம் நாம் நுழையும் ஒன்று அல்ல. எதிர்காலம் நாம் உருவாக்கும் ஒன்று".

"எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாகவும்,சரியாகவும் செயல்பட வேண்டும். அதில் அதில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது".
"புதுமை என்பதுதான் போட்டியிலிருந்து வேறுபட்டு, முன்னேற ஒரே வழி".
"வியாபாரத்தில், நீங்கள் ஒரு தயாரிப்பை உருவாக்கவில்லை. நீங்கள் ஒரு வாடிக்கையாளரை உருவாக்குகிறீர்கள்".
"நல்ல சேவையை வழங்கினால், நல்ல வியாபாரம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்".
“நான் எப்போதும் சரியான முடிவை எடுக்கவேண்டும் என்று யோசிப்பதில்லை. முடிவு எடுத்த பிறகு அதை சரியானதாக மாற்றிவிடுவேன்”.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |