தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக எங்கே வைக்கப்பட்டுள்ளது?
இந்திய தொழிலதிபர் மற்றும் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா தனத 86 வயதில் நேற்று காலமானார்.
ரத்தன் டாடா
ரத்தன் டாடா 1937ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவரது தந்தை ஜாம்ஷெட்ஜி இவர் டாடாவின் பேரனான நாவல் டாடா. கடந்த 1955ஆம் ஆண்டு ரத்தன் டாடாவுக்கு 17 வயதானபோது, கட்டுமானமும் பொறியியலும் கற்க அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.
இவரின் உயர்கல்விக்குப் பின்னர் 1962ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தில் உதவியாளரகச் சேர்ந்தார். அதில் பல பதவிகளை வகித்தது வந்த இவர் பின் 1974-இல் டாடா நிறுவனத்தின் இயக்குநரானார். இதன் பின்னர் கடந்த 1975ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் மேம்பட்ட வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றார்.
தற்போது இவரின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக இன்று மும்பையின் தேசிய கலை மையத்தில் வைக்கப்படும். இதற்காக மகாராஷ்டிர அரசு அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
இவரது உடல் காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக என்.சி.பி.ஏ-வில் வைக்கப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். இதற்கு ஜார்கண்ட் மாநில அரசும் ஒருநாள் அரசு துக்கம் அறிவித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |