Ratan Tata: ரத்தன் டாடா காதல் தோல்வியில் முடிந்தது ஏன் தெரியுமா?
மறைந்த தொழிலதிபரான ரத்தன் டாடாவின் காதல் கதை குறித்தும், அது தோல்வியடைந்தது குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ரத்தன் டாடா
இந்தியாவின் முன்னணி தொழில் உற்பத்தி நிறுவனமான டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், எமிரிட்டஸ் தலைவருமான ரத்தன் டாடா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
86 வயதான ரத்தன் டாடாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், நேற்று ஐசியூ-விற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு சில மணி நேரத்திற்கு அவரது இதயத்துடிப்பு படிபடியாக குறையத் தொடங்கிய நிலையில், இரவு 11.40 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இன்றைய இளைஞர்களின் தொழில் கனவுகளுக்கு முன்மாதிரியாக இருந்த இவர், பணக்கார குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சாதாரண தொழிலாளியாகவே தனது குடும்ப நிறுவனத்தில் பணியைத் தொடங்கினார்.
ரத்தன் டாடா, 1991 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராக இருந்தார். இவர் இருந்த காலத்தில் குறித்த டாடா குழுமம் பெரும் வளர்ச்சியைப் பெற்றது. நடுத்தர குடும்பத்தினர் கூட காரை சொந்தமாக்க வேண்டும் என்பதற்காக டாடா நானோ (TATA NANO) காரை ஒரு லட்சம் ரூபாய்க்கு வடிவமைத்து, சந்தைக்கு கொண்டு வந்தார்.
இதனால் நடுத்தர மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தார். குறிப்பாக ஜாக்குவார் மற்றும் லேண்ட் ரோவர் ஆகிய கார்களையும் சந்தைப்படுத்தி உலகம் முழுவதும் விரும்பும்படி செய்தார்.
பெற்றோரின் விவாகரத்து
ரத்தன் டாடா 1937ம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு ஒரு தம்பியும் உள்ளார். இவரது 10 வயதில், அதாவது 1948ம் ஆண்டு பெற்றோர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.
அப்பொழுது பள்ளியில் இவர்களை சக மாணவர்கள் கிண்டல் செய்து மனதை கஷ்டப்படுத்தியுள்ளனர். ஆனால் பாட்டியின் வளர்ப்பில் வளர்க்கப்பட்டுள்ளார். பாட்டி சண்டை போடக்கூடாது, ஒழுக்கமாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும் என்று கூறியே இவர்களை வளர்த்துள்ளார்.
இவருக்கும், இவரது தந்தைக்கும் அதிக மனக்கசப்புகள் இருந்துள்ளது. ரத்தன் டாடா வயலின் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவரது தந்தை பியானோவில் கொண்டு சேர்த்துள்ளார்.
மேலும் படிப்பதற்கு அமெரிக்கா செல்ல வேண்டும் கூறியதற்கு தந்தையோ பிரிட்டன் செல்லுமாறு கூறியுள்ளார். கட்டிட வடிவமைப்பாளராக ஆசைப்பட்ட ரத்தன் டாடாவை அவரது தந்தை, பொறியியாளர் தான் படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, தனது பாட்டியின் ஆதரவினால் அரெிக்காவில் கர்னல் பல்கலைக்கழகத்தில் ஆர்கிடெக்சர் படிப்பை முடித்துவிட்டு, மேலாண்மை படிப்பை ஹார்வர்ட் பல்கலையில் படித்தார்.
காதல் தோல்வி
அப்பொழுது ரத்தன் டாடாவிற்கு அங்கே பெண் ஒருவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. அவரையே திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அத்தருணத்தில் பாட்டியின் உடல்நிலை முடியாமல் போனதால் இந்தியாவிற்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு அப்பெண்ணும் வருவார் என்று எதிர்பார்த்த ரத்தன் டாடாவிற்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆம் 1962ம் ஆண்டு சீனா இந்தியா போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், குறித்த பெண்ணின் பெற்றோர் அவரை இந்தியாவிற்கு வருவதற்கு சம்மதிக்கவில்லையாம். அதன் பின்பு திருமணம் செய்யாமலேயே தனது வாழ்க்கையை வாழ்ந்து முடித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |