காகத்தோடு பயங்கர சண்டையிட்ட எலி... இறுதியில் என்ன நடந்ததுனு தெரியுமா?
பொதுவாகவே காகமும், எலியும் எதிரிகள். எங்காவது சாலையில் எலி இறந்து கிடந்தால் காகங்கள் கூட்டமாக இருந்து அவற்றை சாப்பிடுவதைப் பார்த்திருப்போம். இதனாலேயே காகத்தைப் பார்த்தால் எலி ஏதாவது பொந்துக்குள் ஓடிவிடும். இங்கே வயல் ஒன்றில் எலி ஒன்று நின்று கொண்டிருந்தது. தன் கூரிய அலகுகளால் எலியை கொன்று சாப்பிட நினைத்து வந்தது காகம் ஒன்று.
இதைப் பார்த்து சுதாகரித்துக் கொண்ட எலி, தன் வாயால் காகத்தின் வாய்ப் பகுதியை இறுத்தி கடித்துக்கொண்டது. காகம் எலியை தன் காலால் அடித்தபோதும், எலி தன் பிடியை விட்டுக் கொடுக்கவே இல்லை. எலியை அப்படியே தூக்கிக்கொண்டு பறக்க முயற்சித்த போதும், எலி விட்டுக்கொடுக்காமல் அதன் வாயை தரையை நோக்கி இழுத்தது.
ஒருகட்டத்தில் காகம் தன் காலால் எலியின் க ழுத்துப் பகுதியை இறுக்கமாக அழுத்தியது. அப்போதும் கூட எலி தன் பிடியை விடவே இல்லை. இதை படம் பி டித்துக் கொண்டிருந்த ஒருவர் கடைசியில் வந்து காகத்தை விரட்டிவிட்டார். அவர் விரட்டும் போது கூட எலி தன் பிடியை விடவே இல்லை.
எதிரி எவ்வளவு பலமானவராக இருந்தாலும் தன்னம்பிக்கையோடு போராடினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.