தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடிய ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா: வைரலாகும் காணொளி!
ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா தங்களின் திருமணத்திற்குப் பிறகு, தாய்லாந்தின் கோ சாமுயியில் உள்ள ஒரு தனிப்பட்ட Airbnb வில்லாவில் ஹனிமூன் கொண்டாடியுள்ளனர். குறித்த காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா
நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள்.

அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள்.
இந்நிலையில்,விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த 26 ஆம் திகதி உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைப்பெற்றது.

இவர்களின் திருமணம் ஒரு வார காலத்திற்கும் மேல் பல கொண்டாட்டங்களுக்கு நிகழ்வுகளுடன் நடைபெற்றது.
அனைத்து புகைப்படங்களையும் இந்த தம்பதியினரே இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கினர்.

திருமணத்திற்கு பிறகு ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ஹனிமூனுக்கு சென்ற புகைப்படங்கள் எதையும் இதுவரையில் வெளியிடாமல் இருந்தனர்.

இந்நிலையில், தாய்லாந்தின் கோ சாமுயியில் உள்ள ஒரு தனிப்பட்ட Airbnb வில்லாவில் ஹனிமூன் கொண்டாடிய காணொளியை அவர்களே தங்களின் சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ளர். குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் அள்ளி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |