ஹல்தி நிகழ்வில் கிழிந்த ராஷ்மிகாவின் ஆடை... இப்படியொரு ரகளை நடந்ததா?
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் ஹல்தி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றதுஃ
ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களின் திருமணம் ஒரு வார காலத்திற்கும் மேல் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு நிகழ்வுகளின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது.

இவர்களின் திருமணத்திற்கு சென்ற யாரும் மொபைல் கொண்டு செல்வதற்கு அனுமதி அளிக்காத நிலையில், அனைத்து நிகழ்வுகளின் புகைப்படங்களை ஒவ்வொன்றாக குறித்த தம்பதிகளே பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது ஹல்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். வெறும் ஹல்தியாக மட்டுமல்லாமல், வண்ணங்களில் நனைந்த ஹோலி பண்டிகையாகவும் இது இருந்துள்ளது.

தற்போது ராஷ்மிகா வெளியிட்ட ஹல்தி புகைப்படங்கள் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது. அதுமட்டுமின்றி இவர்கள் வெளியிடும் கேப்ஷனும் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

ஹல்தி ஒரு 'போர்' போன்ற எண்ணத்தை எனக்கு கொடுக்க வேண்டும் என்று தான் எதிர்பார்த்தது போன்று, மதிய உணவின் போது ஆடைகள் கிழிந்து, கலர் பொடி பூசி ரகளையில் காணப்பட்டோம். தான் அணிந்திருந்த குர்தாவும் கிழிந்துவிட்டதாகவும் இந்த மகிழ்ச்சியான தருணத்திற்கு எதையும் இழக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |