தங்கச் சிலைப்போல் போஸ் கொடுத்த ராஷ்மிகா - வைரலாகும் புகைப்படம்
தங்கச் சிலைப்போல் போஸ் கொடுத்த ராஷ்மிகாவின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தங்கச் சிலைப்போல் போஸ் கொடுத்த ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய்யுடன் அவர் நீண்ட காலமாக நடிக்க வேண்டும் என்ற ஆசை ‘வாரிசு’ படத்தின் மூலம் நிறைவேறியது.
இப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபீசில் பல கோடிகளை அள்ளி வசூல் சாதனைப் படைத்தது. சமீபத்தில் நடிகை ராஷ்மிகா, அகமதாபாத் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடக்க விழாவில் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் தற்போது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகை ராஷ்மிகா தங்கச் சிலைப்போல் போஸ் கொடுத்துள்ளார்.
வைரலாகும் இந்தப் படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் அடடா... என்ன அழகு என்று வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.