திருமணமான இரண்டு மாதத்தில் கண்ணீர் சிந்திய ராஷ்மிகா... கணவர் பேசியது என்ன?
நடிகை ராஷ்மிகா கணவர் விஜய்யின் பேச்சைக் கேட்டு கண்கலங்கி அழுதுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா
நடிகை ராஷ்மிகா, நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமண கொண்டாட்டம் ஒரு வாரத்திற்கு மேலாகவே நடைபெற்றது. அவ்வப்போது திருமண கொண்டாட்டத்தின் புகைப்படங்களை குறித்த தம்பதிகள் வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் ராஷ்மிகா குறித்த கேள்விக்கு கணவர் விஜய் தேவரகொண்டா அளித்துள்ள பதில் அவரை ஆனந்த கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

விஜய் தேவரகொண்டாவின் பதில்
திருமணமாகி இரண்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில், இருவரும் நடிப்பில் பிஸியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ராஷ்மிகா குறித்து விஜய் பேசிய பேச்சு அவரை ஆனந்த கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
ராஷ்மிகாவை எவ்வளவு பிடிக்கும் என்ற கேள்விக்கு, ராஷ்மிகா எதிர்மறையான விடயங்களை எதிர்கொண்டாலும், அதனைக் குறித்து கவலைபடாமல் தனது வேலையை செய்பவர். அற்புதமான பெண், அனைவரிடமும் அன்பையும், கருணையையும் காட்டுவார்.

சவால்கள் நிறைந்த இந்த துறையில் தனது நேர்மையைக் காப்பாற்றிக்கொள்ளவே அவர் எப்போதும் முயற்சிப்பார் என்றும், தன்னை இந்த உலகம் எப்பொழுதும் மாற்றக்கூடாது என்று நான் விரும்புவதாகவும், ராஷ்மிகாவும் என்னை மாற்றுவதற்கு முயற்சிக்க விரும்ப மாட்டார் என்றும் கூறியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |