புலி வாலை பிடித்து கெத்து காட்டிய பிரபலத்தை திட்டிய நடிகை!
பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானம் புலி வாலை பிடிக்கும் படி வெளியிட்ட வீடியோ காட்சிக்கு பிரபல நடிகை ரஷ்மி கௌதம் விமர்ச்சித்து டுவிட்டொன்றை வெளியிட்டுள்ளார்.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் டாஃப் நகைச்சவை நடிகர்களில் சந்தானம் முதலிடத்தை பிடிக்கிறார். இவர் ஆரம்பத்தில் சின்னத்திரையிலிருந்து தான் சினிமாவிற்குள் நுழைந்துள்ளார்.
இவரின் யதார்த்தமான நடிப்பால் தமிழகத்தில் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.
மேலும் கவுண்டமணி மற்றும் செந்தில் வரிசையில் வடிவேலுக்கு அடுத்தப்படியாக இவர் தான் இருக்கிறார்.
இதனை தொடர்ந்து நகைச்சவை நடிகராக இருந்த சந்தானம் தற்போது கதாநாயகராக நடித்து வருகிறார். அந்த திரைப்படங்கள் பாரிய வெற்றியைடையாவிட்டாலும் நகைச்சுவை மிக்க திரைப்படமாக இருக்கிறது.
புலி வாலை பிடித்து கெத்து காட்டிய பிரபலம்
இந்நிலையில், சமிபத்தில் தன்னுடைய டவிட்டர் பகுதியில் புலி வாலை பிடித்தப்படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த பல ரசிகர்கள் அவரை கலாய்க்கும் வகையிலும், பாராட்டியும் பலர் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
ஆனால் அதில் பிரபல நடிகை ரஷ்மி கௌதம் சந்தானத்தை கடுமையாக விமர்ச்சித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
@iamsanthanam did u not feel any kind of sympathy towards the tiger when he was being electrocuted so he wakes up to make u look like a strong man or hav u just lost ur sensitivity https://t.co/2m3GaUmpMh
— rashmi gautam (@rashmigautam27) December 28, 2022
இதன்படி பதிவில், “புலி மயக்கத்தில் இருக்கிறது அதனை தொந்தரவு செய்யாமல் இருப்பது நன்று. மேலும் புலியை தொந்தரவு செய்வதால் நீங்கள் பலசாலியாக காட்டிக் கொள்ள முயற்சிக்கீறீர்களா?” என கருத்து பதிவிட்டுள்ளனர்.
இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த விமர்சகர்கள் சந்தானத்தை இன்னும் வைத்து செய்துள்ளனர்.