திருமண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா! வாயடைத்துப்போன விமர்சகர்கள்..!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒருவராக நடித்த த்ரிஷா திருமணம் குறித்து மனம் திறந்து முதல் தடவை ஊடகத்திடம் பேசியுள்ளார்.
தமிழ் சினிமா
கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு “மௌனம் பேசியதே” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான த்ரிஷா. எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதியுடன் அவரது 20 வருட சினிமா வாழ்க்கையயை பூர்த்தி செய்யவுள்ளார்.
இந்நிலையில் இவரது வயது நாற்பதை தாண்டும் நிலையில் 20 வருடங்களாக இவரது அழகு குறையவே இல்லை. ஆனால் இதுவரை திருமணம் குறித்து மனம் திறக்கவும் இல்லை திருமணம் செய்துக் கொள்ளவும் இல்லை.
இவரது திருமணம் குறித்து பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் வினவப்பட்ட போது முதல் தடவையாக மனம் திறந்துள்ளார்.
திருமணம்
திருமணம் குறித்து த்ரிஷா கூறுகையில், “கடந்த 2015 ஆம் ஆண்டு வருண் மணியன் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் எதிர்பாராதவிதமாக திருமணம் கைவிடப்பட்டது. என்னிடம் திருமணம் எப்போது என்று கேட்டால் என்னால் கூட பதில் சொல்ல இயலாது.
யாருடன் இருக்கிறேன், யாரை எனக்கு பிடிக்கிறது என்பதை பொறுத்து அமையும். ஒருவருடன் பழகும்போது இவருடன் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழலாம் என்று தோன்ற வேண்டும். விவாகரத்துகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு தெரிந்த சில பேர் திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக இல்லை. அது போன்ற திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை.” என தெரிவித்துள்ளார்.
இவரது இந்த பதிவு ரசிகர்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.