உலகின் மிக விலையுயர்ந்த உலோகம் எதுன்னு தெரியுமா? வெறும் 1 கிராம் 239 கோடியா!
பொதுவாக ஒரு வீட்டின் பொருளாதாரத்தை மாத்திரமன்றி நாட்டின் பொருளாதாரத்தையும் நிர்ணயம் செய்வதில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் தங்கம் செல்வத்தின் இறுதி அடையாளமாகக் கருதப்படுகிறது.
பல நூற்றாண்டுகளாக, உலகம் முழுவதும் நகைகள், சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு தங்கம் நம்பகத்தன்மை வாய்ந்ததாக அறியப்படுகின்றது.

ஆனால் விலையைப் பொறுத்தவரையில் தங்கம் பூமியில் மிகவும் விலையுயர்ந்த உலோகம் என்று கருதிவிட முடியாது. 200 கிலோ கிராம் தங்கத்தின் விலை மதிப்பில் உலகின் விலையுயர்ந்த ஒரு உலோகத் தனிமத்தின் வெறும் ஒரு கிராம் தான் வாங்கமுடியும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம், கலிபோர்னியம் என்ற மதிப்புமிக்க தனிமத்தின் விலை தான் உலகில் உச்சத்தில் இருக்கின்றது. கலிபோர்னியம் (Californium) என்பது கதிரியக்கத் தன்மை கொண்ட உலோகத் தனிமம் ஆகும்.

இந்த உலோகம் ஏன் மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கிறது, குறிப்பிட்ட தொழில்களில் மட்டும் ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
கலிஃபோர்னியம் என்றால் என்ன?
கலிஃபோர்னியம் என்பது Cf என்ற குறியீட்டைக் கொண்ட ஒரு செயற்கை கதிரியக்க வேதியியல் தனிமம் ஆகும். இது முதன்முதலில் 1950 ஆம் ஆண்டு பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

கலிஃபோர்னியம் மிகவும் அரிதானது மற்றும் விலை உயர்ந்தது, அதில் ஒரு கிராம் மட்டும் 200 கிலோகிராம் தங்கத்திற்கு மேல் மதிப்புடையது என்று குறிப்பிடப்படுகின்றது.
தங்கத்தைப் போலல்லாமல், கலிஃபோர்னியம் பூமியிலிருந்து வெட்டப்படுவதில்லை. இது மேம்பட்ட அணுக்கரு செயல்முறைகள் மூலம் உருவாக்கப்படுகிறது, இது ஒரு செயற்கை தனிமம், அதாவது இது கவனமாக கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் அணு உலைகளில் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

இந்த செயல்முறை நீண்ட காலத்திற்கு நியூட்ரான்களைக் கொண்டு மற்ற தனிமங்களை தாக்குவதை உள்ளடக்கியது, இதனால் உற்பத்தி மெதுவாகவும், கடினமாகவும் இருக்கும் எனவே தான் மிகவும் விலை உயர்ந்ததாகவும் காணப்படுகின்றது.
ஏன் இவ்வளவு விலை உயர்ந்தது?
கலிஃபோர்னியத்தின் விலை அதன் அரிதான தன்மையையும் அதை உற்பத்தி செய்வதில் உள்ள சிரமத்தையும் பிரதிபலிக்கிறது. ஒரு கிராம் கலிஃபோர்னியத்தின் விலை சுமார் 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

அதாவது தோராயமாக ரூ.239 கோடி. ஒப்பிடுகையில், ஒரு கிலோகிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ.1.2 கோடி மட்டுமே. அதாவது இதன் அர்த்தம் ஒரு கிராம் கலிஃபோர்னியத்தை விற்றால் கிட்டத்தட்ட 200 கிலோகிராம் தங்கத்தை வாங்க முடியும் என்பதாகும்.
அதனால் தான் இது தங்கம், பிளாட்டினம் அல்லது வைரங்களை விட மிகவும் மதிப்புமிக்கதாக காணப்படுகின்றது.
எதற்கு பயன்படுத்தப்படுகிறது?
இவ்வளவு விலை மதிப்பு மிக்க உலோகமானது எதற்கு பயன்படுத்தப்படுகின்றது என்ற சந்தேகம் தற்போது நிச்சயம் எழுந்திருக்கும். கலிஃபோர்னியத்தின் மிக முக்கியமான பயன்பாடு அணுசக்தித் துறையில் உள்ளது.
இது ஒரு சக்திவாய்ந்த நியூட்ரான் மூலமாக செயல்படுகிறது, இது அணு உலைகளைத் தொடங்க உதவுகிறது மற்றும் அணுசக்தியில் ஆராய்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
அதுமாத்திரமன்றி மருத்துவத் துறையில், கலிஃபோர்னியம்-252 நியூட்ரான் சிகிச்சை எனப்படும் சிறப்பு புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நுட்பம் புற்றுநோய் செல்களை மிகத் துல்லியத்துடன் அழிக்க உதவுகிறது, குறிப்பாக வழக்கமான கதிர்வீச்சு சிகிச்சை பயனுள்ளதாக இல்லாத சந்தர்ப்பங்களில் அதனை படுன்படுத்துகின்றார்கள்.
கலிஃபோர்னியம் விண்வெளி ஆய்வு, தொழில்துறை சோதனை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
இது மறைக்கப்பட்ட அணுசக்தி பொருட்களைக் கண்டறியவும், பொருட்களை ஆய்வு செய்யவும் துணைப்புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |