குடும்பமாக சேர்ந்து கின்னஸ் சாதனையா? அப்படி என்ன செய்தார்கள்..?
பாகிஸ்தானில் ஒரு குடும்பத்திற்கு பிறந்த நாளை அடிப்படையாக வைத்து கின்னஸ் சாதனை விருது கொடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பிறந்த நாள்
பொதுவாக உலக மக்கள் பார்த்து வியந்து போகும் விடயங்களை தான் கின்னஸ் புத்தகத்தில் எழுதுவார்கள்.
அந்த வகையில், பாகிஸ்தானின் லர்கானாவை பூர்வீகமாக கொண்ட அமீர் அலிக்கும் அவரின் மனைவி - குதேஜாவிற்கும் ஏழு குழந்தைகள் இருக்கிறார்கள்.
இந்த குழந்தைகளில் நான்கு பேர் இரட்டையர்கள், இவர்களுக்கு 19 முதல் 30 வயது தான் இருக்கும்.
ஆமிர் மற்றும் குதேஜாவின் திருமண நாள் “ஓகஸ்ட் 1” திகதி 1991 ஆம் ஆண்டு நடைப்பெற்றுள்ளது.
கின்னஸ் சாதனையா?
இந்த நிலையில் இந்த குடும்பத்திலுள்ளவர்கள் அணைவருக்கும் “ஓகஸ்ட் 1” திகதி தான் பிறந்த நாள் வருகின்றது. இது மட்டுமல்லாது இவர்களின் திருமண நாளும் அன்றைய தினம் தான் வருகின்றது.
இதற்காக தான் இந்த குடும்பத்தினருக்கு “ஒரே திகதியில் ஒன்பது குடும்ப உறுப்பினர்கள் பிறந்ததற்கான உலக சாதனை” மற்றும்.“ அதே திகதியில் பிறந்த அதிக உடன்பிறப்புகளுக்கான சாதனை” உள்ளிட்ட விடயங்களுக்கு இவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்கள்.
இவர்கள் குடும்பமாக பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள், “ இப்படியெல்லாமா கின்னஸ் சாதனை செய்வீங்க..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |