பகத் பாசிலுக்கு வந்த சோதனை.. 41 வயதில் இப்படியொரு நோயா? குழப்பத்தில் மருத்துவர்கள்
நடிகர் ஃபகத் பாசிலுக்கு அரிய நோய் தாக்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஃபகத் பாசில்
தமிழ் சினிமாவை போல் மலையாள படங்களின் மாஸ் ஹீரோவான நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ஃபகத் பாசில்.
இவர் தந்தை அறிமுகத்தால் சினிமாவிற்கு வந்து தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் பலரை மிரள வைத்தவர்.
கதாநாயகனை தொடர்ந்து எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று நடிக்கக் கூடியவர்.
அந்த வகையில் இவர் நடிப்பில் தமிழில் சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன், புஷ்பா, விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் வெளியாகியன.
அரிய வகை நோய்
இந்த நிலையில், 41 வயதாகும் பஹத் பாசிலுக்கு ADHD என கூறப்படும் Attention-deficit/hyperactivity disorder என்ற நோய் வந்துள்ளதாக அவரே கூறியுள்ளார்.
இந்த நோய் குழந்தைகளுக்கு தான் அதிகமாக வரும் என்றும் இவருக்கு வந்திருக்கும் நோய் பெரியவர்களுக்கு வந்தால் கடினமாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி பஹத் பாசில் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |