விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பேய் சுறா மீன்.! ட்விட்டரில் வைரல்
நியூசிலாந்து விஞ்ஞானிகள் மிகவும் அரிய வகை பேய் சுறா மீனை கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக இது சிறிய மீன்வகை என்றும், ஆழ் கடலில் மட்டுமே வாழக்கூடியது என்றும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இதை தென் தீவுக்கு அருகே, சுமார் 1.2 கி.மீ ஆழ்கடலில் கண்டுபிடித்து உள்ளனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக அவற்றின் குட்டிகளை பார்ப்பது இன்னும் அரிதானது.
தற்போது இளம் பருவ நிலையில் கிடைத்துள்ள பேய் சுறா மீன் ஆனது வெள்ளை வால் மற்றும் கருப்பு கண்கள், கருப்பு துடுப்புகளை கொண்டுள்ளது. குறிப்பாக இதன் மூலம் இந்த வகையான மீன் குட்டிகளின் இளம் பருவ நிலையை பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
குறிப்பாக ஆழ்கடல் உயிரினங்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்றும், அதிலும் இந்த பேய் சுறா மீன கண்டுபிடிப்பது என்பது அரிதானது என அந்த ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர்.
தற்போது இந்த அரிய வகை பேய் சுறா மீனின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
NIWA scientists have made the rare discovery of a newly-hatched ghost shark. ??
— NIWA (@niwa_nz) February 15, 2022
Read more here: https://t.co/CqANKjcLHf