பிறக்காத குழந்தைக்கு பெயர் சூட்டிய மாதம்பட்டி ரங்கராஜனின் 2வது மனைவி
பிரபல சமையல் துறை நிபுணர் மாதம்பிட்டி ரங்கராஜனின் 2வது மனைவி பிறக்காத தன் குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரபல சமையல் துறை நிபுணர் மாதம்பிட்டி ரங்கராஜன் தமிழ் திரையுலக பிரபலங்கள் வீட்டிற்கு சமைத்து கொடுப்பவராவார். இதை ஒரு நிறுவனமாக நடத்தி வருகிறார்.
இதை தவிர தற்போது சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர்.
2ம் மனைவி
இந்த நிலையில் இரண்டாவதாக மாதம்பட்டி ரங்கராஜன் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது. மாதம்பட்டி ரங்கராஜ் பேஷன் டிசைனரான ஜாய் கிரிஸ்ல்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. ஜாய் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஆவார். இவர் திருமணம் செய்துகொண்ட உடன் 6 மாத கர்ப்பமாக இருக்கிறார் என தெரிவித்து இருந்தார்.
ஆனால் கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்றது பேசுபொருளானது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராமில், குழந்தையின் பெயரை ராஹா ரங்கராஜ் என அறிவித்து பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
