சிறுநீரக கல் கரைந்து வெளியேறணுமா? இந்த மூலிகையில் ஒரு ஜூஸ் குடிச்சா போதும்
சிறுநீரக கற்களால் பாடுபடும் மக்கள் அதனால் பெரும் வலியை அனுபவிக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு தீர்வாக பதிவில் ஒரு மூலிகை ஜூஸ் பார்க்கலாம்.
சிறுநீரக கற்கள்
சிறுநீரக கற்கள் பிரச்சனையால் தற்போது ஆண், பெண் இருவருமே அவதிப்பட்டு வருகின்றனர். பெண்கள் சரி பரவாயில்லை அனால் ஆண்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனை.
இதனால் சிறுநீர் கழிக்கும் போது தாங்க முடியாத வலி ஏற்படும். சிறுநீரகத்திற்கு நேராக பின்புறத்தில் முதுகு வலி அதிகமாக இருக்கும். இதை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டு விட்டால் கற்களின் அளவு பெரிதாகி அறுவை சிகிச்சையில் கொண்டு நிறுத்தும்.
இது போன்ற ஆபத்து தவிர்க்கவும் ஒருவேளை உங்களுக்கு சிறுநீரக கற்களின் அளவு பெரிதாகி இரந்தாலும் கீழ்வரும் இந்த மூலிகையை எடுத்துக் கொள்ளும் பொழுது அது கரைந்து வெளியே செல்லும்.

மூலிகை ஜூஸ்
ஒரு ஐந்து முதல் ஆறு ரணகள்ளி இலையை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதை ஒரு மிக்ஸியில் போட்டு அதில் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு ஸ்பூன் அளவு தேன், சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் மேலும் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அரை எலுமிச்சை பழத்தின் சாறை அதில் பிழிந்து விட்டு நன்கு கலந்து விட்டால் ரணகள்ளி ஜூஸ் தயார்.
இதை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 24 நாட்கள் எடுத்துக் கொள்ளும் போது (அரை மண்டலம்) சிறுநீரகக் கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து சிறுநீரின் வழியே அவை முழுமையாக வெளியேறிவிடும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |