பொடுகு மற்றும் முடி உதிர்வை தடுக்கும் வெந்தயப்பொடி ஷாம்பூ... எப்படி செய்யலாம்?

Hair Growth Beauty
By Pavi Jan 03, 2026 10:41 AM GMT
Pavi

Pavi

Report

தலைமுடிக்கு இரசாயன ஷாம்பூ பயன்படுத்தாமல் இயற்கையாக மூன்று பொருள் கொண்டு வீட்டிலேயே ஷம்பூ செய்யும் முறை பார்க்கலாம்.

 ஷாம்பூ செய்யும் முறை

குளிர்காலத்தில் நம் சருமம் மட்டும் வறண்டு போகாது. நமது தலைமுடியும் பல பிரச்சனைகளை உள்வாங்கும். இதனால் பொடுகு பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கும். 

தலையில் அmதிகமாக பொடுகு இருந்தால் அது நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் நாம் பல விலை உயர்ந்த ஷாம்பூக்களை வாங்கி குளிப்போம். 

இந்த ஷாம்புகள் மற்றும் பல முடி பராமரிப்புப் பொருட்களில், கூந்தலுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக தீங்கு விளைவிக்கும் கடுமையான இரசாயனங்கள் கலந்துள்ளன.

பொடுகு மற்றும் முடி உதிர்வை தடுக்கும் வெந்தயப்பொடி ஷாம்பூ... எப்படி செய்யலாம்? | Prevent Dandruff And Hair Loss Fenugreek Shampoo

குறட்டை விடுவதை அலட்சியமாக விடாதீங்க... மிகப்பெரிய நோய்க்கு அறிகுறியாக இருக்கும்

குறட்டை விடுவதை அலட்சியமாக விடாதீங்க... மிகப்பெரிய நோய்க்கு அறிகுறியாக இருக்கும்

நாம் நமது சருமம் மற்றும் முடிக்கு எவ்வளவு ஆரோக்கியமான பொருட்களை பயன்படுத்துகிறோமோ அவ்வளவு நன்மை தரும். இதற்கு நாம் சில இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம். 

இவை தலைமுடியை சுத்தப்படுத்தி, வேர்களை வலுப்படுத்த உதவுகின்றன. பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரியத்தில் முடி வளர்ச்சிக்கும், பொடுகு நீக்கவும் வெந்தயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே இந்த பதிவில் வெந்தயம் மற்றும் இன்றும் இரண்டு பொருட்கள் கொண்டு தயாரிக்கக்கூடிய ஷாம்பூவை பற்றி தெரிந்துகொள்வது நன்மை தரும். 

வெந்தயப் பொடியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஷாம்பூ செய்யப்படுகின்றது. இது இரசாயனங்கள் இல்லாத பாதுகாப்பான வழியில் பளபளப்பான முடியை உங்களுக்கு தரும். 

பொடுகு மற்றும் முடி உதிர்வை தடுக்கும் வெந்தயப்பொடி ஷாம்பூ... எப்படி செய்யலாம்? | Prevent Dandruff And Hair Loss Fenugreek Shampoo

ஷாம்புக்கான பொருட்கள்

  1. ஷிகாக்காய் பவுடர் (1/4 கப்)
  2. ரீத்தா பவுடர் (1/4 கப்)
  3. வெந்தயப் பொடி (1/4 கப்)

தயாரிப்பு முறை - நீங்கள் செய்ய வேண்டியது  இந்த ரெசிபிக்கான அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, ஒரு காற்றுப் புகாத ஜாடியில் சேமிக்கவும்.

பொடுகு மற்றும் முடி உதிர்வை தடுக்கும் வெந்தயப்பொடி ஷாம்பூ... எப்படி செய்யலாம்? | Prevent Dandruff And Hair Loss Fenugreek Shampoo

பயன்படுத்தும் முறை

நீங்கள் தலைக்குக் குளிக்கும்போதெல்லாம், அந்தப் பொடிக் கலவையில் இருந்து 2 முதல் 3 டீஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளவும். அதில் வெந்நீர் அல்லது கிரீன் டீ தண்ணீரைச் சேர்க்கவும்.

இந்தக் கலவையை 2 முதல் 3 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, பின்னர் உங்கள் தலைமுடியில் நன்கு தடவவும். சரியான ஊட்டச்சத்து கிடைக்க  உச்சந்தலையிலும் முடியின் நுனி வரையிலும் இந்தக் கலவையைத் தடவுவது அவசியம்.

முடிந்த பிறகு, அதைத் வெற்று நீரில் நன்கு கழுவி, உங்கள் தலைமுடியை காற்றில் உலர விடவும். 

பொடுகு மற்றும் முடி உதிர்வை தடுக்கும் வெந்தயப்பொடி ஷாம்பூ... எப்படி செய்யலாம்? | Prevent Dandruff And Hair Loss Fenugreek Shampoo

முக்கியமான குறிப்புகள்

நுரை வராது: இந்த இயற்கையான ஷாம்பு, வணிக ரீதியான ஷாம்புகளைப் போல அதிக நுரை வராது. காரணம் இதில் நுரைக்கும் இரசாயனம் இல்லை. எனவே, இதைப் பயன்படுத்துவதற்கு முன்னர் உங்கள் தலைமுடியில் எண்ணெயைத் தடவ வேண்டாம்.

இரண்டாவது கழுவல்: ஒரு வேளை இந்த ஷாம்பு உங்கள் தலைமுடியை முழுவதுமாக சுத்தம் செய்யவில்லை என உணர்ந்தால் அதற்குப் பின்னர் ஒரு லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி தலைமுடியை கழுவலாம்.

ஒவ்வாமை எச்சரிக்கை: மிக முக்கியமாக இந்த ஷாம்பூவில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவதாக உங்களுக்கு தெரிந்தால் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

பொடுகு மற்றும் முடி உதிர்வை தடுக்கும் வெந்தயப்பொடி ஷாம்பூ... எப்படி செய்யலாம்? | Prevent Dandruff And Hair Loss Fenugreek Shampoo

ஷாம்பூவின் நன்மைகள்

தலைமுடி வளர்ச்சி: வெந்தயப் பொடி தலைமுடிக்குத் தேவையான புரதத்தின் சிறந்த மூலமாக இருக்கிறது. இது முடியின் அளவை அதிகரிக்கவும் மற்றும் முடி உதிர்வைத் தடுக்கவும் உதவும்.

நரை முடிக்கு: உங்கள் தலைமுடி அதிகமாக நரைத்தால், இதில் உள்ள ஷிகாகாய் பொடி நன்மை தரும்.

இயற்கை சுத்தம்: ரீத்தா பவுடர் உங்கள் தலைமுடியை இயற்கையாகவே சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

பொடுகு நீக்கம்: இந்தச் சத்து நிறைந்த ஷாம்பு, பொடுகை நீக்குவதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று அறியப்படுகிறது.

இந்த அறிகுறிகள் தெரியுதா ? அப்போ இதய குழாய் பத்திரம்

இந்த அறிகுறிகள் தெரியுதா ? அப்போ இதய குழாய் பத்திரம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW          


மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US