நீச்சல் உடையில் நடிகை ரம்யாகிருஷ்ணன்: புகைப்படத்தினை வைரலாக்கும் ரசிகர்கள்
நடிகை ரம்யாகிருஷ்ணன் நீச்சல் உடையில் இருக்கும் பழைய புகைப்படம் தற்போது நெட்டிசன்களிடையே வைரலாகி வருகின்றது.
ரம்யாகிருஷ்ணன் என்றாலே ரசிகர்களின் நினைவிற்கு வருவது, நீலாம்பரியும், ராஜமாதாவும் தான். ஆம் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தினை கச்சிதமாக செய்பவர்.
தமிழ் சினிமாவில் வெள்ள மனசு படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு, படவாய்ப்புகள் குறைவாகவே காணப்பட்டது. கேப்டன் பிரபாகரன் படத்தில் ஆட்டமா தேரோட்டமா பாடலில் இவரது நடனம் ஏகப்பட்ட ரசிகர்களை குவித்தது.
தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு என தனது நடிப்புத்திறமையினை காட்டி வரும் இவருக்கு அம்மன் வேடமும் அட்டகாசமாக பொருந்தியது.
தற்போது பிரபல ரிவியில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிவரும் இவரின் பழைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
படத்தின் போட்டோ சூட்டுக்காக நீச்சல் உடையில் ரம்யா கொடுத்த போஸ் அன்று நாளிதழ்களில் பயங்கர ட்ரண்டிங் ஆன நிலையில், தற்போது மீண்டும் வைரலாகி வருகின்றது.
