பிக்பாஸ் நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டேன்... ரசிகர்களிடம் உண்மையை உடைத்த ரம்யா பாண்டியன்!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் தமிழ் சினிமாவில், டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக நடித்து அறிமுகமானவர்.
அதன் பின்னர், ஆண்தேவதை ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து இருக்கின்றார். இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
அண்மையில், இவர் நடித்திருந்த ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியானது. இந்நிலையில், பிக்பாஸில் கலந்து கொண்டது குறித்து ரம்யா பாண்டியன் ஓப்பனாக பேசியுள்ளார்.
பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலம் தனக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என்று தான் எண்ணி இருந்ததாகவும் ஆனால் அதனால் எனக்கு பாதிப்பு தான் நிறைய ஏற்பட்டது என்றும்
குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் சிறந்தது என்றும் அந்த நிகழ்ச்சியில் எனக்கு ரசிகர்களிடம் இருந்து எந்த வெறுப்பும் வரவில்லை அதுதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஜாலியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.