கண்டிஷன் திருமணம்.. ரம்யா பாண்டியனுக்கு மாப்பிள்ளை கொடுத்த வரதட்சணை- அம்மா ஓபன் டாக்
நடிகை ரம்யா பாண்டியன் திருமணத்திற்கு முன்னர் வாங்கிய வரதட்சணை மற்றும் போட்ட கண்டிஷன் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை ரம்யா பாண்டியன்
தென்னிந்திய பிரபலங்களில் வளர்ந்து வரும் நடிகையாக பார்க்கப்படுபவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.
இவர், பிரபல நடிகர்அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார். சினிமா குடும்பத்திலிருந்து சினிமாவுக்குள் வந்திருந்தாலும் பெரிதாக படவாய்ப்புகள் ரம்யா பாண்டியனுக்கு கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்த ரம்யா பாண்டியன் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அவருக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.
காதல் திருமணம்
இந்த நிலையில் லோகன் தவான் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவரிடம் கடந்த ஆண்டு முதல் ரம்யா பாண்டியன் யோகா பயிற்சி செய்து வந்துள்ளார்.
ரம்யா பாண்டியன்- லோகன் தவான் காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இவர்களின் திருமணம் அடுத்த மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகிய நிலையில், கடந்த மாதம் சொந்தங்களுக்கு முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது.
கணவர் இறப்பு
இதனை தொடர்ந்து ரம்யா பாண்டியன் அம்மா பேட்டியொன்றில் மகள் திருமணம் குறித்து பேசியுள்ளார்.
அதாவது, “ எங்களுடைய சொந்த ஊர் திருநெல்வேலி, எங்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். அதில் இரண்டாவது தான் ரம்யா பாண்டியன். அவர் ரொம்பவே கெட்டிக்காரி மற்றும் திறமையானவர்.
என்னுடைய கணவர் சில படங்கள் இயக்கியிருந்தார். ஆனால் அந்த படங்கள் தோல்வி அடைந்ததால் நாங்கள் எங்கள் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்று பிசினஸ் செய்து வந்தோம். அங்கு விஷ பூச்சி கடித்து கணவர் இறந்து விட்டார்.
என்னுடைய கணவர் இறப்புக்கு பிறகு குடும்பத்தை கட்டி காத்தது ரம்யா பாண்டியன் தான்.
ரம்யா பாண்டியன் முறைப்படி நடந்த திருமணம்
திருமணத்தின் போது எங்கள் முறைப்படி தாலி கட்ட வேண்டும் என்று ரம்யா சொன்னதால் மாப்பிள்ளையும் ஏற்றுக் கொண்டார். ஆனால் சங்கீத், ஹெல்த்தி பங்க்ஷன் எல்லாமே அவர்களுடைய முறைப்படி தான் நடந்தது.
மாப்பிள்ளை எப்படி நல்லவரோ அதுபோல அவருடைய குடும்பத்தினரும் மிகவும் நல்லவர்கள்.
திருமண செலவுகள் அனைத்தையும் மாப்பிள்ளை ஏற்றுக் கொண்டார். ஆனால் ரம்யா ரிசப்ஷன் செலவை ஏற்றுக் கொண்டு செய்தார்.
மாப்பிள்ளை குடும்பம் பஞ்சாப் மாநிலம் அங்கு அவர்களுடைய எட்டு மெடிக்கல் லேப் இருக்கிறது. 65 பேருக்கு மேல் அவர்களிடம் வேலை செய்து வருகிறார்கள். எங்களிடமிருந்து ஒரு ரூபாய் கூட வரதட்சணை வாங்கவில்லை.
மாப்பிள்ளை கொடுத்த வரதட்சணை
பஞ்சாப் முறைப்படி பொண்ணு வீட்டில் வரதட்சணை கேட்க கூடாதாம். மாப்பிள்ளை தான் வரதட்சணை கொடுத்து திருமணம் பண்ணிக்கணும் என்றார்கள். அதனால் மாப்பிள்ளை திருமணத்திற்கு முன்னரே பெரிய தொகை கொடுத்து நகை வாங்க சொன்னார்.
திருமணம் முடிந்து ரம்யா பாண்டியன் செய்து கொடுத்த கேசரியை சாப்பிட்டு விட்டு அவருடைய மாமியார் ஒரு பாக்ஸில் ஒரு லட்ச ரூபாயை போட்டுக் கொடுத்தார்.
இப்படி அவர்கள் பணம் மட்டுமல்லாமல் குணத்திலும் சிறந்தவர்கள். மாப்பிள்ளையும் ரம்யாவை ரொம்ப அன்போடு பார்த்துக் கொள்கிறார்...” என பேசியுள்ளார்.
இந்த செய்தியை பார்த்த ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன், வாழ்த்துக்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |