திருமணத்தின் பின்னரும் ரசிகர்களை கிறங்கடிக்கும் ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்
நடிகை ரம்யா பாண்டியன் ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ரம்யா பாண்டியன்
ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். முதல் படத்திலேயே தனது நடிப்பு திறமையை அழுத்தமாக வெளிப்படுத்தியதால் அதனை தொடர்ந்து சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஆண் தேவதை படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
அதனை தொடர்ந்து மொட்டைமாடி போட்டோஷூட் மூலம் சினிமாவில் நடித்தால் கூட கிடைக்காதளவுக்கு அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
பாவாடை தாவணி அணிந்து இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் அவரே கற்பனை செய்து பார்த்திராத அளவுக்கு சமூகவலைத்தளங்களில் வைரலாகி பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யமடைந்தார்.
அந்த போட்டோஷூட்ற்கு பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு லோகன் தவான் என்ற யோகா ஆசிரியரை நீண்ட காலமாக காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்தின் பின்னரும் நடிப்பு மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வரும் ரம்யா பாண்டியன் ட்ரெண்டிங் சேலையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |