அடையாளம் தெரியாமல் மாறி திருமண கோலத்தில் இருக்கும் ரம்யா பாண்டியன் ! ரசிகர்கள் ஷாக்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரம்யா பாண்டியன் திருமண புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியனுக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் அவரது பெயரில் ஆர்மிகள் கூட ஆரம்பிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னரும் அவர் அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவரின் திருமணப் புகைப்படம் இணையத்தில் உலாவி வருகின்றது. பின்னர் தான் அது அவர் நடித்து வெளியாக இருக்கும் புதிய படத்தின் புகைப்படம் என தெரிய வந்துள்ளது.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் ’ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற படத்தில் ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் செப்டம்பரில் ஓடிடியில் வெளியாகும் என சமீபத்தில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய ஸ்டில்கள் தற்போது வெளியாகி உள்ளது என்பதும் அதில் ஒன்று ரம்யா பாண்டியனின் திருமண புகைப்படமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.