நடிகர் யாஷ் உடன் ரம்யாகிருஷ்ணன் போட்ட ஆட்டம்! வைரலாகும் காணொளி
நடிகர் ரம்யாகிருஷ்ணன் மற்றும் கேஎஃப்சி நடிகர் யாஷ் இருவரும் நடனமாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ரம்யாகிருஷ்ணன் நடனம்
ரெபல் ஸ்டார் அம்பரீஷ் - நடிகை சுமலதா ஜோடியின் மகனான அபிஷேக்கின் திருமணம், கடந்த வாரம் பெங்களூருவில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பல முன்னணி நடிகர்கள் மட்டுமின்றி, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு முதற்கொண்டு அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
திருமணவிழாவில் கன்னட நடிகர் யாஷும் கலந்து கொண்ட நிலையில், இவர் நடிகை ரம்யாகிருஷ்ணன் உடன் நடமாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கே.ஜி.எஃப் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. கடந்தாண்டு வெளியான இப்படம் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது குறிப்பிடத்தக்கது.