53 வயதிலும் ஹீரோயினுக்கு நிகராக மிரட்டும் ரம்யாகிருஷ்ணன்... சொத்து மதிப்பு என்ன?
நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில், அவரது சொத்து விபரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்த 30 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் மிரட்டி வரும் நிலையில் சமீபத்தில் கூட ரஜினியின் மனைவியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.
1970ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் பிறந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். மறைந்த பழம்பெரும் நடிகர் சோ ராமசாமியின் உறவுக்கார பெண்ணான இவர் தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை 2003ம் ஆண்டு திருமணம் செய்ததுடன் இவர்களுக்கு ரித்விக் வம்சி என்ற மகன் உள்ளார்.
பரத நாட்டியத்தில் ஈடுபாடு கொண்ட இவர் 1983ம் ஆண்டு வெள்ளை மனசு என்ற படத்தில் அறிமுகமானார். பின்பு பல படங்களில் நடித்ததுடன், தெலுங்கிலும் நடித்து அசத்தினார்.
ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் இன்று வரை பேசப்பட்டு வருகின்றது. பின்பு பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.
சொத்து விபரம் என்ன?
நடிகை ரம்யா கிருஷ்ணன் இளம் ஹீரோயின்களுக்கு நிகராக சினிமா படங்களில் நடிக்க சம்பளம் வாங்கி வருகிறாராம்.
ஒரு படத்துக்கு 3 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும், சின்னத்திரையில் ஒரு எபிசோடுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகின்றது.
இவருக்கு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் சொந்தமாக வீடுகள் உள்ளதுடன், பல நிலங்களையும் வாங்கி வைத்திருப்பதாகவும், அதிகபட்சமாக தற்போது வரை இவரிடம் 98 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று இவர் தனது 53வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், ரசிகர்கள் இவரைக் குறித்த தேடல்களை அதிகப்படுத்தியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |