கணவரை பிரிந்து வாழ்வது ஏன்? ரம்யாகிருஷ்ணன் உடைத்த உண்மை
Ramya Krishnan Open Talk Divorce: நடிகை ரம்யா கிருஷ்ணன் விவாகரத்து வதந்திக்கு தற்போது பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகை ரம்யா கிருஷ்ணன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் படையப்பா நீலம்பரியாகவும், பாகுபலி படத்தில் சிவகாமியாக இந்த கதாபாத்திரங்கள் அவருக்கு அடைமொழியாகவும் மாறியது. கடந்த வாரங்களில் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை விஜய் சேதுபதிக்கு பதிலாக தொகுத்தும் வழங்கினார்.
இவர் தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சி என்பவரை 2003ம் ஆண்டு திருமணம் செய்தார். சந்திரலேகா என்ற தெலுங்கு படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றினர்.

கணவரை பிரிந்துவிட்டாரா?
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தனது கணவரை பிரிந்துவிட்டதாகவும், அதனால் தான் இருவரும் வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர் என்று கூறி வந்தனர்.
ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரம்யாகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், தனக்கு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது ஹைதராபாத்தில் வசித்து வந்ததாகவும், அங்கிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து அங்கும் செல்வது சிரமமாக இருந்தது.
அவ்வாறான தருணத்தில் தனது மகனுக்கும் உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. இதனால் கணவரும், தானும் சேர்ந்து முடிவெடுத்து மகனை சென்னையில் பள்ளியில் சேர்த்துவிட்டு தானும் அங்கேயே தங்கிவிட்டேன்.

ஆனால் நாங்கள் இன்னும் திருமண உறவில் தான் இருக்கின்றோம். வேலை சார்ந்து எடுக்கப்பட்ட முடிவே இதுவாகும். மகிழ்ச்சியாகவும், வசதியாகவும் இருவரும் வெவ்வேறு நகரங்களில் வசித்து வருகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், நடைமுறைக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவு தங்களுக்கு வசதியாக மாறியுள்ளது என்றும் அருகில் இருந்து சண்டையிடுவதற்கு பதிலாக, தற்போது நல்ல நண்பர்களாக இருப்பதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி திருமணத்திற்கு வம்சி ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். லிவிங்கில் இருக்கலாம் என்று கூறினார். நான் அப்போதே சரி என்று கூறியிருக்கலாம் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |