ராஜமாதா ரம்யாகிருஷ்ணனா இது? உடல் எடை அதிகரித்து வெளியான புகைப்படம்
ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் இயக்குனர்கள் கௌதம் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவான குயின் தொடரின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு நடிகை ரம்யாகிருஷ்ணன்.
படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தன்னுடைய இருப்பை உறுதிப் படுத்திக் கொண்டே இருப்பது இவருடைய பிளஸ் பாயிண்ட் கூறப்படுகிறது.
குயின் வெப் தொடர்
80 மற்றும் 90களிலிருந்து தற்போது வரை படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் கூட நடித்துள்ளார்.
நடிகை ரம்யா கிருஷ்ணன், இயக்குனர்கள் கௌதம் மேனனும், பிரசாத் முருகேசனும் இயக்கி 'குயின் ' என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று தொடராக இது இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு எம்.எக்ஸ் பிளேயரில் இந்த தொடர் வெளியானது.

குயின் வெப் தொடரில் ரம்யாகிருஷ்ணன், ஷக்தி சேஷாத்திரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். துறுதுறு பெண்ணாக இருந்தது, சினிமாவில் நுழைந்தது, அரசியல் வாழ்க்கை, சோகம், கண்ணீர், மகிழ்ச்சி என ஒவ்வொரு எபிசோடும் மிகுந்த கவனத்தை ஈர்த்தது.11 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

‘குயின்‘ இரண்டாம் பாகம்
இந்நிலையில் தற்போது 'குயின்' வெப் தொடரின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதா கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை படப்பிடிப்பு தளத்தில் இருந்து பகிர்ந்துள்ளார். மேலும், 'ஆமாம் படப்பிடிப்பு தொடங்கி விட்டது என மகிழ்ச்சியாக கூறியுள்ளார். அந்த போட்டோவில் அச்சு அசல் ஜெயலலிதா போல இருக்கிறார் ரம்யாகிருஷ்ணன்.
