கொமடிக்கு லிமிட் இருக்கு! திட்டித்தீர்த்த ரம்யா கிருஷ்ணன்: கலங்கிய நிலையில் கெஞ்சிய புகழ்
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் இதன் ப்ரொமோ வெளியாகி மக்களை குஷிப்படுத்தி வருகின்றது.
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து ஊரடங்கு விதிக்கப்பட்டது. சீரியல் மற்றும் சின்னத்திரை சூட்டிங் நிறுத்தப்பட்டன.
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஜீத், கேப்ரியல்லா, சென்றாயன் உள்ளிட்டோரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டனர்.
இந்நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இந்நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. காமெடி, கலாட்டாவுக்கு பஞ்சமில்லாமல் வித்தியாசமான கான்செப்ட் மற்றும் நடன ரவுண்டுகள் இதில் இடம்பெற்று வருகிறது. ஏற்கனவே, மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தில் இருக்கும் மக்களுக்கு இந்த நிகழ்ச்சி நிச்சயம் விருந்தாக அமையும்.
இதில் நடுவராக இருக்கும் ரம்யாகிருஷ்ணன், சினிமாவை மிஞ்சிய தனது நடிப்பினை கொடுத்து வருகின்றார்.
இந்த பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் அவ்வப்போது காமெடியனாக புகழ், தங்கதுரை, குரோஷி ஆகியோர் பங்கேற்று கலகலப்பாக்கி வருகின்றனர்.
அந்த வகையில் புகழ் நிகழ்ச்சியில் நுழைய ரம்யா கிருஷ்ணன் காமெடிக்கும் ஒரு லிமிட் இருக்கு. இங்க எப்போ காமெடி செய்யணும்னு இருக்கு என புகழை திட்டியுள்ளார். இறுதியில் பார்த்தால் இது பிராங்க் என கூறியுள்ளார்.