பிரஜினின் வாய்ஸ் நோட் வெளியிட்ட பிக்பாஸ் ரம்யா ஜோ - இப்படியெல்லாம் பேசி இருக்காரா?
தமிழ் பிக் பாஸ் சீசன் 9 இன் பிரஜன் வெளியே வந்ததும் ரம்யா ஜோவிற்கு அனுப்பிய வாய்ஸ் நோட்டை அவர் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 9 வீடு ஒரு சண்டை சச்சரவான வீடு என்று தான் சொல்ல வேண்டும். வீட்டிற்கு உள்ளே இருந்து தான் சண்டை போடுகிறார்கள் என்று பார்த்தால் அந்த சண்டையும் வன்மமும் வெளியில் வந்தும் தொடரத்தான் செய்கிறது.

பிக் பாஸ் கடைசி நாளில் வீட்டிற்குள் திரும்பவும் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள். அப்படி அனுப்பிய போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வன்மத்தை கக்குவதில் தான் குறியாக இருந்தார்கள்.
தற்போது வெளியேவும் வந்து ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொருவரை பற்றி வமர்சித்து வருகின்றனர்.
ஒரு புறம் கதை இப்படி இருக்க சாண்ட்ராவிடம் பிரஜன் பகிரச் சொன்ன தகவல் குறித்து பிரஜின் ரம்யா ஜோவுக்கு அனுப்பிய ஆடியோவை ரம்யா ஜோ அவரது இன்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆடியோ
பிரஜன் ரம்யா ஜோவிற்கு அனுப்பிய வாய்ஸ் நோட்டில் “ரம்யா, நீ மீண்டும் வீட்டுக்குள் போகும் போது சாண்ட்ராவிடம் பணப்பெட்டியை எடுக்க சொல்லாதே. நான் சொன்னதை மாற்றி, பணப்பெட்டியை எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிடு.
அதை வேறு யாராவது எடுத்துக்கொள்ளட்டும்”என்று அந்த ஆடியோவில் கூறுகிறார். இதற்கு மக்கள் பலரும் பல விமாசனங்களை முன்வைத்து வருகின்றனர்.
மேலும் ரம்யா ஜோ அந்த காணொளியுடன் அவங்க வீட்டுலயே தோசை ஊற்றும் தவா ஓட்டையா இருக்கும் போது பக்கத்து வீட்டில் தோசை ஓட்டையா இருப்பதை எட்டிப் பார்ப்பார்களாம்.
என்ன ஒரு கேவலமான ஜென்மம். டெடிகேட்டட் டூ நடிப்பு அரக்" என்று பதிவிட்டதுடன், இது யாராக இருக்கும் என்று எனக்கு நேரடியாக மெசேஜ் செய்யுங்கள் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு மக்கள் இது என்ன சான்ராவை வம்பிழுக்க தான் இவர் இப்படி பாதிவிட்டுள்ளர் என கருத்து விமர்சித்து வருகின்றனர்.
Captain Ramya leaks Prajean voice message on Instagram
— Mohamed Anwar Sadat (@sadat_agency) February 4, 2026
😵💫#Biggbosstamil9 @VijaySethuOffl pic.twitter.com/sM2SHJx3WF
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |