விஜய்யின் வெற்றிக்கு நடிகை ரம்பா வெளியிட்ட புகைப்படம்... என்ன கூறியிருக்கிறார்னு தெரியுமா?
நடிகை ரம்பா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக இருந்துவரும் நிலையில், விஜய்யின் தேர்தல் வெற்றிக்கு முதல்நபராக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகை ரம்பா
தமிழ் சினிமாவில் முன்னணியாக நடிகையாக வலம்வந்த நடிகை ரம்பா, 2010ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார். தற்போது 49 வயதாகும் ரம்பா இன்னும் இளமையாகவே காணப்படுவது ரசிகர்களை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தற்போது Jodi are you ready நிகழ்ச்சியில் நடுவராக இருக்கின்றார். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துபவர் தற்போதும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
அதாவது இன்று தமிழக சட்டமன்ற தேர்வு முடிவு வெளியான நிலையில், நடிகை ரம்பா விஜய்யிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதில் தான் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |