சீதைக்கும் ராமருக்கு நடந்ததுபோல ஒரு திருமணம்- வியந்துபோன ஊர் மக்கள்!
இன்றைய நவீன காலக்கட்டத்தில் அன்றாடம் வித்தியாசமான திருமணங்களை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில், பீகார் மாநிலத்தில் சமீபத்தில் பண்டைய கால முறையில் நடைபெற்ற திருமணம் அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சரண் மாவட்டம் சபல்பூர்க்கு அருகேயுள்ள சோன்பூர் பிளாக் என்ற பகுதியில் ராமருக்கும், சீதைக்கும் ராமாயணத்தில் எவ்வாறு திருமணம் நடைபெற்றதோ அவ்வாறே நடைபெற்றுள்ளது.
அப்போது, மேடையில் முதலில் மணமகன், அங்கு வைத்திருந்த பெரிய வில்லை தன் இரு கைகளாலும் எடுத்து வளைத்து ஒடிக்கிறார்.
அதன்பின்னர், மேடைக்கு வந்த மணமகள், மணமகனுக்கு மாலை அணிவித்து தனது கணவராக ஏற்றுக் கொள்கிறார். பின்னர் அங்கிருந்த அனைவரும் பூக்களை தூவி புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த வித்தியாசமான முறையில் நடந்த இந்த திருமணம் அப்பகுதியில் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் வீடியோக்கள் வைரலாகிறது.