நளினியுடன் சேர்ந்து வாழ்வது உண்மையா? உண்மையை உடைத்த நடிகர் ராமராஜன்
நடிகர் ராமராஜன், தனது முன்னாள் மனைவி நளினியுடன் சேர்ந்து வாழ்வது குறித்த உண்மையை வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகர் ராமராஜன்
தமிழ் சினிமாவில் மீனாட்சி குங்குமம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ராமராஜன். பின்பு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்ஃ
பின்பு பல படங்களில் நடித்த இவர் கரகாட்டக்காரன் படம் தற்போதும் ரசிகர்களுக்கு பிடித்தமான படமாகவே இருக்கின்றது.
நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர் என பல திறமைகளைக் கொண்டுள்ள இவர், நடிகை நளினியை காதலித்து வந்த நிலையில், வீட்டை எதிர்த்து இருவரும் திருமணமும் செய்தனர்.
இவர்களின் திருமணம் எம்ஜிஆர் தலைமையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களுக்கு அருண் மற்றும் அருணா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
1987ம் ஆண்டு திருமணமான நிலையில் 13 ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதிகள் 2000ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
ஆனாலும் நளினி தனது கணவர் ராமராஜனை தற்போதும் காதலித்து வருவதாகவும், ராமராஜன் நளினி மீது அன்பும், மரியாதையும் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் இருவரும் எந்தவொரு இடத்திலும் ஒருவரைவொருவர் தவறாக பேசியது கிடையாது.
மீண்டும் சேர்ந்துவிட்டார்களா?
இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களின் பிள்ளைகளுக்காக மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்ததாக கூறப்பட்ட நிலையில் தான் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் ராமரஜான் கூறுகையில், நடக்காத ஒரு விடயத்தினை ஏன் இப்படி பேசுகின்றார்கள் என்பது தனக்கு தெரியவில்லை.
நளினியும், நானும் ஒன்றாக வாழ்வது என்பது உண்மை இல்லை. இனிமேல் நடக்காத விடயத்தை உண்மை போல் பேசுவதை தவிர்க்கவும்.
நாங்கள் பிரிந்து 25 வருடங்கள் கடந்துவிட்டது. தனியாக வாழ பழகி விட்டேன். இதுபோன்ற வதந்திகளால் எங்கள் இருவரின் மனதும் வருத்தமடைகிறது.
எங்களுடைய பிள்ளைகளும் இந்த வதந்தியால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே இது போன்ற வதந்தியை கிளப்பும் நபர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |